வி சினிமா குளோபல் நெட் வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் "எவனும் புத்தனில்லை.'

இந்தப் படத்தில் நபி நந்தி, சரத் இருவரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள்.

Advertisment

poonamkarur

கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கௌரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார்.

கௌரவ வேடத்தில் சினேகன் நடிக்கிறார்.

"நான் கடவுள்' ராஜேந்திரன், சங்கிலிலிமுருகன், எம்.எஸ். பாஸ்கர், வேல. ராமமூர்த்தி, சிங்கமுத்து, முருஆரு, கே.டி.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, "பசங்க' சிவக்குமார், சுப்புராஜ், எம். கார்த்திகேயன், "காதல்' சரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ். விஜயசேகரன்.

Advertisment

""அண்ணன்- தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக, ஆக்ஷன், திரில்லர் படமாக மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லிஇருக்கிறோம்'' என்கிறார் இயக்குநர்.